Monday, February 06, 2006

2.அந்தங் கடந்தநித் தியானந்த போதமாய்ப்

2.அந்தங் கடந்தநித் தியானந்த போதமாய்ப்
பந்தந் தணந்த பரஞ்சுடராய் - வந்த
குறியுங் குணமுமொரு கோலமுமற் றெங்குஞ்
செறியும் பரம சிவமாய் - அறிவுக்(கு)

நித்தியானந்தம் = நித்திய (நிலைத்த) ஆனந்தம்
பந்தம் = (வினைப்) பாசம்
தணந்த = இயல்பாக நீங்கிய
குறி = பெயர்
கோலம் = வடிவு, அழகு, உருவம்
அற்று = இல்லாது
அறிவுக்கு = உயிரின் அறிவுக்கு

முதல், நடு, முடிவு ஆகியவை இல்லாத, என்றும் நிலைத்த இன்ப அறிவுடையவனே! கட்டுப்பாடு இல்லாத மேலான ஒளி மயமானவனே! அன்பருக்கு அருள் புரிய வந்த, பெயரும், குணங்களும், உருவுமில்லாமல், எங்கும் பரம சிவமாய் (சீவனாய்) நிறைந்திருக்கும் மேலான மங்கலப் பொருளே!

4 Comments:

ஞானவெட்டியான் said...

g.ragavan said...

ஐயா, இதுதானே குறியைக் குறியாது குறித்து அறியும் நெறி?

9:26 PM

ஞானவெட்டியான் said...

senthu said...

ஆஹா! சலமிலன் பேர் சங்கரன்!
மிக்க மகிழ்ச்சி ஐயா, தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்
-செந்து

ஞானவெட்டியான் said...

அன்பு இராகவன்,

// ஐயா, இதுதானே குறியைக் குறியாது குறித்து அறியும் நெறி?//

குறி = எண்ணம், தோற்றம், பெயர், குணம், குறிப்பு, சொல்லுதல், பயிலல், செய்தல்


நீங்கள் குறிப்பது "எண்ணம்."

எண்ணத்தைத் தோற்றுவிக்காது செய்து அறியும் நெறி (வழிமுறை)ஞானவினைச் செயல்தான்.

7:11 AM

ஞானவெட்டியான் said...

அன்பு செந்து,
வாழ்த்துக்கு நன்றி.

7:16 AM